Home மாவட்டங்கள் பெங்களூர் முன்னாள் அமைச்சர்ராமச்சந்திர கவுடா காலமானார்

முன்னாள் அமைச்சர்ராமச்சந்திர கவுடா காலமானார்

பெங்களூரு: ஜூலை 14-
கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல் தலைவருமான ராமச்சந்திர கவுடா உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியில், மாநில முன்னாள் அமைச்சரான ராமச்சந்திர கவுடாவின் மறைவு செய்தி பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளித்துள்ளது என்றும், அவர் எப்போதும் எளிமையின் சிகரமாகவும், கண்ணியமிக்க தலைவராகவும் திகழ்ந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சியின் வளர்ச்சிக்காகவும், கர்நாடக மாநிலத்தின் முன்னேற்றத்திற்காகவும் அவர் ஆற்றிய பணிகள் அளப்பரியவை.
கர்நாடக அரசியலிலும், தன் கட்சியிலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர் ராமச்சந்திர கவுடா. எப்போதும் மக்கள் நலன் மற்றும் மாநில வளர்ச்சி குறித்தே சிந்தித்து வந்த அவர், இளம் அரசியல்வாதிகளுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தார். அவரது மறைவு கர்நாடக மாநில அரசியலுக்கும், அவரது கட்சிக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். இதன் மூலம் ஒரு சிறந்த மூத்த வழிகாட்டியை கர்நாடகம் இழந்துள்ளது.
மறைந்த ராமச்சந்திர கவுடாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும், அபிமானிகளுக்கும் இந்த துக்கத்தைத் தாங்கும் சக்தியை இறைவன் வழங்க வேண்டும் என்று அந்த இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.