Home Uncategorized அரசு பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை

அரசு பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை

திருப்புவனம்: ​ஜூலை 20-
மாணவர் சேர்க்கை குறைந்​தா​லும், அரசுப் பள்​ளி​களை மூடும் எண்​ணம் இல்லை என பள்​ளிக்கல்​வித் துறை அமைச்​சர் ராஜ்மோகன் தெரி​வித்​தார். சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே கீழடி​யில் நடை​பெறும் 11-ம் கட்ட அகழாய்​வுப் பணி​யை​யும், திறந்​தவெளி அகழ் வைப்​பகத்​தை​யும் பார்​வை​யிட்ட பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது: முந்​தைய ஆட்​சிகளில் தொடங்​கப்​பட்ட அனைத்து நல்லதிட்​டங்​களை​யும் தவெக அரசு நிறுத்​தாது. அதில் இருக்​கும் குறை​கள் சரி செய்யப்பட்டு மேம்​படுத்​தப்​படும்.
பழி​வாங்​கும் அரசி​யல் எங்​களிடம் இல்​லை. கீழடி மட்​டுமின்றி அகரம், கொந்​தகை உள்​ளிட்ட இடங்​களி​லும் அகழாய்​வு​கள் நடை​பெறுகின்​றன. மேலும், தேவை​யான அறி​வியல் சான்​றுகளைத் தாக்​கல் செய்து கீழடி அகழாய்வு முடிவுகளைவெளி​யிட, இந்​திய தொல்​லியல் துறை​யிடம் பேச்​சு​வார்த்தை நடத்​தப்​படும்.
கட்டண விவரங்​களை வெளி​யி​டாதது குறித்து புகார் வந்த பள்​ளி​களுக்கு மாவட்​டக் கல்வி அலு​வலர்​கள் எச்​சரிக்கை விடுத்​துள்​ளனர். தனி​யார் பள்​ளி​கள் அரசு நிர்​ண​யித்த கட்​ட​ணத்தை மட்​டுமே வசூலித்து விதி​களை பின்​பற்ற வேண்​டும். மாணவர் சேர்க்கை குறைந்​தா​லும், அரசுப் பள்​ளி​களை மூடும் எண்​ணம் இல்​லை. வீடு, வீடாகச் சென்று அறி​வுறுத்தி மாணவர் சேர்க்கை அதி​கரிக்​கப்​படும். தமிழகத்​தில் காம​ராஜர் ஆட்​சி​தான் தொடர்​கிறது. அரசுப் பள்​ளி​களில் காலை உணவுத் திட்​டம் விரிவுப்​படுத்​தப்​படும்.
மத்​திய வெளி​யுறவுத் துறை​யிடம் சட்​டப்​பூர்வ அனு​மதி பெற்​றுத்​தான் வெளி​நாட்​டுப் பயணம் மேற்​கொண்​டோம். இதில் எந்த சட்​ட​விரோத​மும் இல்​லை. கட்​சி​யில் இணை​யும் அனை​வரை​யும் அரவணைத்​துச் செல்​வோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.