Home செய்திகள் உலக செய்திகள் அமெரிக்கா சொல்வதை எல்லாம் கேட்க முடியாது – முஷ்டியை முறுக்கும் ஈரான்

அமெரிக்கா சொல்வதை எல்லாம் கேட்க முடியாது – முஷ்டியை முறுக்கும் ஈரான்

தெஹ்ரான், ஆக. 9- ஹார்முஸை சுற்றிலும் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கிடையே ஹார்முஸை திறக்க வேண்டும் என்றால் அமெரிக்கா தனது நடவடிக்கைகளை மாற்றி கொள்ள வேண்டும் என்று ஈரான் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. உலக எரிபொருள் வர்த்தகத்தில் கணிசமான பங்கு ஹார்முஸை சுற்றி நடக்கும் நிலையில், ஈரானின் இந்த கருத்து பதற்றத்தை அதிகரிப்பதாகவே இருக்கிறது. வளைகுடாவில் அமெரிக்கா ஈரான் நாடுகள் நேரடியாக தாக்குதல் நடத்துவதை நிறுத்தியுள்ளன. ஆனாலும், அங்கு போர் நிறுத்தம் முழுமையாக அமலுக்கு வந்துவிட்டது என சொல்ல முடியாது. அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. சர்வதேச எரிசக்தி வர்த்தகத்தில் ஹார்முஸ் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், அதை சுற்றிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஹார்முஸை திறக்க சில புதிய நிபந்தனைகளை ஈரான் விதித்துள்ளது. இது தொடர்பாக ஈரான் பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்கா தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். அதை அவர்கள் செய்யாத வரை ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்சிலின் செயலாளரும், ஈரானின் புரட்சிகர காவல்படையின் தளபதியுமான முகமது பகர் சோல்கத்ர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். அமெரிக்கா இனி ஈரானை ஒருபோதும் அச்சுறுத்தக்கூடாது என்றும் ஈரான் மற்றும் ஹவுதி உள்ளிட்ட அதன் பிராந்திய குழுக்களுக்கு எதிரான போரை நிரந்தரமாக நிறுத்த வேண்டும் என்பதே ஈரானின் முதல் நிபந்தனை.