Home செய்திகள் தேசிய செய்திகள் எப்சிஆர்ஏ மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு

எப்சிஆர்ஏ மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: ஆக. 10-
வெளி​நாட்டு நன்​கொடைகளுக்கு கட்​டுப்​பாடு​களை விதிக்​கும் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்​கு​முறை) திருத்த மசோதாவுக்கு (எப்சிஆர்ஏ) காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளன.
தற்​போது சட்​டத்​தில் மேலும் 3 திருத்​தங்​கள் செய்​யப்​பட்​டு, வெளிநாட்டு பங்​களிப்பு (ஒழுங்​கு​முறை) திருத்த மசோதா 2026 (எப்​சிஆர்ஏ) வரையறுக்​கப்​பட்டு உள்​ளது. இந்த திருத்த மசோதா கடந்த மார்ச் மாதம் மக்​களவை​யில் தாக்​கல் செய்​யப்​பட்டு நிலுவை​யில் உள்​ளது.
வெளி​நாட்டு நன்​கொடைகள் மூலம் எந்த மாநிலத்​தில் என்​னென்ன தொண்​டுப் பணி​கள் மேற்​கொள்​ளப்பட உள்ளன என்​பதை தொண்டு நிறு​வனங்​கள் (என்​ஜிஓக்​கள்) உறு​தி​மொழி பத்​திர​மாக தாக்​கல் செய்ய வேண்​டும்.
வெளி​நாட்டு நன்​கொடைகளை ஒரு​போதும் மதமாற்​றத்​துக்கு பயன்​படுத்​தக்​ கூ​டாது. என்​ஜிஓக்​களின் பதிவு ரத்து செய்யப்பட்டால், வெளி​நாட்டு நன்​கொடைகளால் உருவாக்கப்பட்ட என்​ஜிஓக்​களின் சொத்​துகளை அரசு நிர்​வாகமே கையாளும் என்று மசோ​தா​வில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது.சமீபத்திய புள்​ளி​விவரத்​தின்​படி நாடு முழு​வதும் 22,498 என்ஜிஓக்களின் பதிவு ரத்து செய்​யப்​பட்டு உள்​ளது. 15,212 என்​ஜிஓக்​களின் பதிவு காலா​வ​தி​யாகி உள்​ளது. சுமார் 14,449 என்​ஜிஓக்​கள் மட்​டுமே செயல்​பாட்​டில் உள்​ளன. எப்​சிஆர்ஏ மசோ​தா​வின் மூலம் உரிம பதிவு ரத்து செய்​யப்​பட்ட என்ஜிஓக்களின் சொத்​துகளை அரசு நிர்​வாகம் தனது கட்டுப்பாட்டில் எடுத்​துக் கொள்​ளும் என்று எதிர்க்​கட்சி தலைவர்கள் குற்​றம் சாட்டி வரு​கின்​றனர்.
இதே காரணத்தை சுட்டிக் காட்டி பல்​வேறு கிறிஸ்​தவ, முஸ்​லிம் மதம் சார்ந்த என்​ஜிஓக்​களும் மசோ​தாவுக்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்து வருகின்றன.