
புதுடெல்லி, ஆகஸ்ட் 15-இந்திய பார் கவுன்சிலின் தலைவர் நீண்ட காலம் பதவியில் நீடிப்பதை கேள்விக்குள்ளாக்கியும், அதன் செயல்பாடுகளில் கட்டமைப்புச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளக் கோரியும் வழக்கறிஞர் எம். வரதன் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், பார் கவுன்சில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கு 2 ஆண்டுகள் மட்டுமே நிலையான பதவிக் காலமாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், ஒருவர் அதிகபட்சமாக 3 முறைக்கு மேல் இப்பதவிகளை வகிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கடந்த 30 ஆண்டுகளில் 20 மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு தலைவர் வாய்ப்பே கிடைக்கவில்லை என்பதால், அனைத்து மண்டலங்களுக்கும் சம வாய்ப்பளிக்கும் வெளிப்படையான சுழற்சி முறையைப் பின்பற்ற வேண்டும். எனவே உடனடியாக கட்டமைப்புச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.













