Home செய்திகள் தேசிய செய்திகள் லடாக்கில் ராணுவ போர்பாராசூட் பரிசோதனை வெற்றி

லடாக்கில் ராணுவ போர்பாராசூட் பரிசோதனை வெற்றி

லே (லடாக்): ஆக. 27:
ல​டாக் யூனியன் பிரதேசத்​தில் உள்ள லே மாவட்டத்தில், உலகின் மிக உயர​மான பகுதி ஒன்​றில் இருந்து பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உரு​வாக்​கிய ராணுவ போர் பாராசூட் அமைப்பு நேற்று வெற்றிகரமாக பரிசோ​திக்​கப்​பட்​டது.
கடல் மட்​டத்​திலிருந்து 22,000 அடி உயரத்​தில், மைனஸ் 15 டிகிரி செல்​சி​யஸ் கடும் குளிரில் டிஆர்​டிஓ தயாரித்த ராணுவ பாராசூட் செயல்​பாடு குறித்து சோதனை நடத்​தப்​பட்​டது. ஏடிஆர்​டிஇ அமைப்​பின் தலை​மைச் சோதனை​யாளர் விங் கமாண்​டர் ராகுல்ஜா, முதன்மை வாரண்ட் அதி​காரி​கள் ஆர்​.ஜே.சிங் மற்​றும் விவேக் திவாரி ஆகிய மூவர் இந்​தச் சாகச பாராசூட் குதிப்​பைச் செய்து காட்​டினர்.
இதுகுறித்து டிஆர்​டிஓ அமைப்பு எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “லடாக்​கில் உள்ள நியோ​மா, மூத் பகு​தி​யில் இச்​சோதனை நடை​பெற்​றது.