Home செய்திகள் தேசிய செய்திகள் போதைப்பொருள் இல்லா இந்தியா: மோடி

போதைப்பொருள் இல்லா இந்தியா: மோடி

புதுடில்லி, ஆகஸ்ட் 30- இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றுவதும், இளைஞர்கள் போதைப்பொருட்களில் இருந்து விலகி இருப்பதை உறுதி செய்வதுமே அரசின் தெளிவான இலக்கு என மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: போதைப்பொருள் இல்லாத இந்தியாவையும், நம் இளைஞர்களுக்கு வலுவான எதிர்காலத்தையும் உருவாக்க நாம் ஒன்றிணைவோம். நாடு வளர்ச்சி அடைய வேண்டுமானால் போதைப்பொருள் இல்லாத நாடாக இந்தியா இருக்க வேண்டும். நாட்டை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றுவதும், இளைஞர்கள் போதைப்பொருட்களில் இருந்து விலகி இருப்பதை உறுதி செய்வதுமே அரசின் தெளிவான இலக்கு. விழிப்புணர்வு போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி, போதைப்பழக்கத்தால் அவதிப்படும் தனிநபர்களுக்கு உதவ முன்வருபவர்களை நான் பாராட்ட விரும்புகிறேன். போதைப்பொருளின் ஆபத்துகளை எடுத்துரைப்பதோடு, அதிலிருந்து மீள்வதற்கான வழிகள் குறித்து பாடல்கள் மற்றும் சிறு நாடகங்களை உங்களால் உருவாக்க முடியுமா? முக்கியத்துவம்பி எம் ஸ்வநிதி திட்டம், லட்சக்கணக்கான பெண் தெருவோர வியாபாரிகள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தவும், வருமானத்தை அதிகரிக்கவும், தங்கள் குடும்பங்களுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும் உதவுகிறது. தூய்மை என்பது மக்கள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.