Home மாவட்டங்கள் பெங்களூர் 30 ஆண்டுகளுக்குப் பின்துபாக் ஷகூர் வழக்கில் தீர்ப்பு

30 ஆண்டுகளுக்குப் பின்துபாக் ஷகூர் வழக்கில் தீர்ப்பு

பெங்களூர்: செப்டம்பர் 1
உலக ராப் இசை முன்னோடிகளில் ஒருவராகக் கொண்டாடப்பட்ட துபாக் ஷகூர் சுட்டுக்கொல்லப்பட்டு கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நீதிமன்றம் இந்த வழக்கில் இறுதி தீர்ப்பை வழங்கியுள்ளது. முன்னாள் ரவுடி கும்பல் தலைவரான 63 வயது டுவேன் கீத் டேவிஸ் குற்றவாளி என நிர்ணயிக்கப்பட்டுள்ளார்.
துபாக் ஷகூர் 1971-ல் நியூயார்க்கில் பிறந்தார். 1990-களின் தொடக்கத்தில் தனது ராப் பாடல்களால் உலகப் புகழ்பெற்றார். சமூக அநீதி, காவல் துறையின் அத்துமீறல்களுக்கு எதிராக தைரியமாக குரல் கொடுத்தவர். 1996 செப்டம்பர் 7-ஆம் தேதி லாஸ் வேகாஸில் மைக் டைசனின் குத்துச்சண்டை போட்டி முடிந்து காரில் திரும்பியபோது, அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் காயமடைந்த துபாக், மருத்துவமனையில் உயிரிழந்தார்.இந்த வழக்கின் விசாரணை பல ஆண்டுகளாக நீடித்தது. துபாக் உண்மையில் இறக்கவில்லையோ என்ற வதந்திகளும் பரவின. நேரடி சாட்சிகள் பேசத் தயங்கியது, தடயங்கள் சேகரிப்பதில் ஏற்பட்ட தாமதம் வழக்கை மேலும் சிக்கலாக்கியது. ஆனால், டேவிஸ் தனது சுயசரிதையில் துப்பாக்கி குண்டு தாக்குதலின் பின்புலத்தை வெளிப்படுத்தியது வழக்கில் முக்கிய திருப்பமாக அமைந்தது. 2023-ல் போலீசார் அவரைக் கைது செய்தனர்.
நீதிமன்றம் 25 சாட்சிகளை விசாரித்து, எட்டு மணி நேர ஆடியோ பதிவுகளைச் சமர்ப்பித்தது. ஜூரி குழு டேவிஸை குற்றவாளி எனத் தீர்மானித்தது. துபாக் குடும்பத்தினர் இதனால் உணர்ச்சிவசப்பட்டனர். டேவிஸின் தண்டனை அக்டோபர் 13 அன்று அறிவிக்கப்பட உள்ளது. 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்க வாய்ப்பு உள்ளது.இசையுலகின் மாபெரும் நாயகன் துபாக் ஷகூரின் மரணத்திற்கு நீதி கிடைத்துள்ளது.உலக ரசிகர்களுக்கு நிம்மதியை அளிக்கிறது.