
காத்மாண்டு, செப். 1- நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் திரிசூலி பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கால், அங்குள்ள விவசாய மேம்பாட்டு வங்கியின் திரிசூலி துங்கே கிளை கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ளம் காரணமாக வங்கி லாக்கரில் இருந்த ரூ.1.5 கோடி ரொக்கம், ரூ.50 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்களை நேபாள காவல் துறை அதிகாரிகள் 8 மணி நேரம் போராடி மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர். இந்த மீட்பு நடவடிக்கையின் வீடியோவை காவல் துறை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும், ரசுவா பள்ளத்தாக்கிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் உள்ள சித்வான் வனப்பகுதியில் அடையாளம் தெரியாத உடல்கள் அழுகத் தொடங்கியதால், பொது மக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு அவசரமாக அடக்கம் செய்யப்பட்டது.













