
குவாஹாட்டி: செப். 4-
அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் ராய்ஜோர் தளம் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்திருந்தன. மொத்தம் 126 தொகுதிகளில், பாஜக கூட்டணி 102 இடங்களை வென்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இதற்கு மாறாக, காங்கிரஸ் கூட்டணிக்கு 21 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
இந்த தோல்விக்குக் காங்கிரஸ்தான் காரணம் என்று ராய்ஜோர் தளத்தின் தலைவர் அகில் கோகோய் குற்றம் சாட்டினார். இதனால், காங்கிரஸ் மற்றும் ராய்ஜோர் தளம் இடையே மோதல் ஏற்பட்டது. இரு கட்சிகளின் தலைவர்களும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தனர்.
இந்நிலையில், அசாம் மாநில காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில், “ராய்ஜோர் தளம் கூட்டணி தர்மத்தை மீறி செயல்படுகிறது. எனவே, அந்த கட்சியுடனான உறவை முறித்துக் கொள்கிறோம்,” என்று அறிவித்துள்ளது.











