
ராய்ச்சூர்: செப். 4-
கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு ஊழல் மற்றும் லஞ்சத்தில் திளைப்பதாக கூறி கர்நாடக மாநில பிஜேபி சார்பில் இதன் மாநில தலைவர் பி.ஒய். விஜயேந்திரா தலைமையில் நடைபெறும் ‘பல்லாரி சலோ’ நடைபயணம் இன்று 4-வது நாளில் அடியெடுத்து வைத்தது.கடந்த 3 நாட்களில் 51 கி.மீ. நடந்து முடித்த நிர்வாகிகள், இன்று சிந்தனூரில் இருந்து காரட்டகி வரை 22 கி.மீ. நடைபயணம் மேற்கொள்கின்றனர்.இன்று காலை 9 மணிக்கு சிந்தனூர் காந்தி சதுக்கத்தில் நடைபயணம் மீண்டும் தொடங்கியது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பசு பூஜை செய்த பிறகு விஜயேந்திரா பயணத்தைத் தொடங்கி வைத்தார். எம்.எல்.ஏ. சுனில் குமார், எம்.பி. கோவிந்த் காரஜோள, முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு உட்பட பலர் இதில் பங்கேற்றனர்.முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும், ஆஷா மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு நிலுவைச் சம்பளத்தை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடக்கிறது. வழிநடக்க பிஜேபி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். பாதயாத்திரைகள் பங்கேற்றுள்ள பிஜேபி தலைவர்கள் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக ஆவேசமாக முழக்கமிட்டு செல்கின்றனர். இதனால் கர்நாடக மாநில பிஜேபியினர் பத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது











