Home செய்திகள் உலக செய்திகள் வெள்ளத்தால் பாதிப்பு: வரியில்லா இறக்குமதி அனுமதி

வெள்ளத்தால் பாதிப்பு: வரியில்லா இறக்குமதி அனுமதி

காட்மாண்டு, செப். 5- வெள்ளத்தால் சேதமடைந்த வணிக வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை சுங்க வரிகளின்றி மாற்றுப் பொருட்களாக இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மாற்றுப் பொருட்களை ஆறு மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு சுங்க அலுவலகம் மூலம் இறக்குமதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், பாதிக்கப்பட்ட வணிகங்கள் மற்றும் சொத்துகளுக்கு சொத்து மற்றும் வணிக வரிகள், கட்டிட அனுமதி கட்டணங்கள் உள்ளிட்ட சலுகைகளை வழங்குமாறு மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடனாளிகள் கடன்களை மறுசீரமைக்கவும், மறு அட்டவணைப்படுத்தவும் வசதி செய்து தருமாறு நேபாள ராஷ்டிர வங்கிக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.