Home மாவட்டங்கள் பெங்களூர் மதுக்கடை ஊழியர்கள் போராட்டம்

மதுக்கடை ஊழியர்கள் போராட்டம்

சென்னை: செப்.5-
காலி மது பாட்டில் வாங்கும் திட்டத்தை திரும்ப பெற வேண்டிய கட்டாயத்தில், காஞ்சிபுரம், தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள மது கடை ஊழியர்கள், நேற்று கடைகளை திறக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த திட்டம் ஊழியர்களுக்கு அதிக சுமையாக இருப்பதாகவும், புதிய விதிமுறைகள் அவர்களின் வேலை நேரத்தை பாதிப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதனால், நுகர்வோர்கள் மதுக்கடைகளுக்கு வந்தும், மதுவை பெற முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், ‘டாஸ்மாக்’ நிர்வாகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. காலி பாட்டில் திரும்ப பெற திட்டம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயல்படுத்தப்படுவதாகவும், ஊழியர்களின் நலனில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளது.
ஆனால், ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை தொடரும் நிலை காணப்படுகிறது. இதனால், தமிழகத்தில் மது விற்பனை பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.