Home மாவட்டங்கள் பெங்களூர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை

கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை

சென்னை: செப்.5-
திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் கே.என். ரவிசந்திரன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. சென்னையின் அடையாறு, ஆர்.ஏ.புரம், அண்ணாநகர், திருவான்மியூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
சட்டவிரோதமாக பல்வேறு நிறுவனங்களை மிரட்டி, பார்ட்டி ஃபண்ட் வசூலித்ததாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, திருச்சி தில்லை நகரில் கே.என். நேருவுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சோதனைகள் சட்டவிரோத நிதி சேகரிப்பை ஒடுக்குவதற்கான முயற்சியாகவும், அரசியலில் நிதி முறைகேடுகளை வெளிக்கொணரும் நடவடிக்கையாகவும் கருதப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இவ்வாறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.