Home மாவட்டங்கள் பெங்களூர் ஓடும் கார் தீப்பிடித்து எாிந்தது: 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஓடும் கார் தீப்பிடித்து எாிந்தது: 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

பெங்களூர் செப். 6-
பெங்களூரு – மைசூர் எக்ஸ்பிரஸ்வே விரைவுச் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீப்பிடித்து முற்றிலும் எரிந்து சாம்பலானது. காரில் இருந்த 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மைசூரைச் சேர்ந்த ஸ்கநத் என்பவருக்குச் சொந்தமான கார், பெங்களூரு – மைசூர் எக்ஸ்பிரஸ்வே விரைவுச் சாலையில் சென்று கொண்டிருந்தது. மண்டியா நகரின் வெளியே உள்ள இந்துவாளு பகுதி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக காரின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை கிளம்பி தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
காரை ஓட்டி வந்த ஸ்கநத் மற்றும் அவருடன் பயணித்த மற்றொருவர், துணி வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.
காரில் தீப்பிடித்ததை உடனடியாக கவனித்த இருவரும், சமயோசிதமாக காரை நிறுத்திவிட்டு வெளியே குதித்து தப்பினர். அவர்கள் கீழே இறங்கிய அடுத்த சில வினாடிகளில் தீ கார் முழுவதும் வேகமாகப் பரவி, புகை மண்டலமாக மாறியது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அணைப்பதற்குள் கார் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடானது.இந்த விபத்து குறித்து உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.