Home விளையாட்டு தென் ஆப்பிரிக்க அணியில் பவுமா மீண்டும்

தென் ஆப்பிரிக்க அணியில் பவுமா மீண்டும்

ஜோகன்னஸ் பர்க், செப். 8- ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்த மாத இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் கலந்து கொள்ள உள்ளது. ஒருநாள் போட்டித் தொடர் வரும் 24, 27 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் தெம்பா பவுமா அணியில் மீண்டும் இணைந்துள்ளார். அனுபவம் வாய்ந்த குயிண்டன் டி காக் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா காயம் காரணமாக தொடரில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக ஜெரால்டு கோட்ஸி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்க அணியினரின் விவரம்: தெம்பா பவுமா (கேப்டன்), எய்டன் மார்க்ரம், ரியான் ரிக்கெல்டன், குயிண்டன் டி காக், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், டோனி டி ஜோர்ஜி, மார்கோ யான்சன், கார்பின் போஷ், மேத்யூ ப்ரீட்ஸ்கே, ஜெரால்ட் கோட்ஸி, ஓட்னீல் பார்ட்மேன், ஜார்ன் ஃபோர்டுயின், கேசவ் மகராஜ், க்வேனா மபாகா, லுங்கி நிகிடி.