
சனா, செப்டம்பர் 9-
ஏமனின் ஜவுஃப் மாகாணத்தில் உள்ள அல் ஹசாம் நகரின் மத்திய சிறைச்சாலையின் மீது சவுதி அரேபியா நடத்திய விமானத் தாக்குதலில், ஒரு குழந்தை உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர். மேலும், ஒரு பெண் உள்பட 7 பேர் காயமடைந்ததாக ஹவுதி சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனீஸ் அல் அஸ்பஹி தெரிவித்தார்.
அதே நேரத்தில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமனில் இருந்து நடத்திய தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 73 பேர் காயமடைந்துள்ளனர் என்று சவுதி தரப்பும் தெரிவித்துள்ளது. ஏமன் எல்லையை ஒட்டியுள்ள சவுதி அரேபியாவின் தெற்குப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வசிக்கும் இடங்கள் மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.வுதி எரிசக்தி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “செப்டம்பர் 8 ஆம் தேதி அதிகாலையில் தெற்கு பகுதிகளில் உள்ள பல எரிசக்தித் தளங்கள் தாக்கப்பட்டதில் குடிமக்கள் காயமடைந்தனர்.
சவுதி அரேபியாவின் அபா சர்வதேச விமான நிலையம், கிங் காலி விமான தளம், அபா மற்றும் ஜஸானில் உள்ள அராம்கோ நிறுவனத்தின் கட்டிடங்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் 73 பேர் காயமடைந்துள்ளனர்.
என கூறப்பட்டுள்ளது.















