Home மாவட்டங்கள் பெங்களூர் கோகுல்தாஸ் ஆணைய அறிக்கை சமர்ப்பிப்பு

கோகுல்தாஸ் ஆணைய அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை: செப். 9-
கள்​ளக்​குறிச்சி கள்​ளச்​சா​ராய உயி​ரிழப்​பு​களுக்கு அதி​காரி​களின் அலட்​சி​யமே காரணம் என்று சட்​டப்​பேர​வை​யில் சமர்ப்​பிக்​கப்​பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்​தாஸ் ஆணைய அறிக்​கை​யில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.
கள்​ளக்​குறிச்சி மாவட்​டத்​தில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 19, 20-ம் தேதி​களில் சட்​ட​விரோத​மாக, மெத்​த​னால் கலக்​கப்​பட்ட கள்​ளச்​சா​ரா​யத்தை குடித்​த​தில் 70 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். 161 பேர் பாதிக்​கப்​பட்​டனர். உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு ரூ.10 லட்​சம், பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க அப்​போதைய முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உத்​தர​விட்​டார்.
சிபிசிஐடி விசா​ரணை நடத்தி வந்த நிலை​யில், நீதி​மன்ற உத்​தர​வின்​படி சிபிஐ விசா​ரணைக்கு மாற்​றப்​பட்​டது இது சம்​பவத்​துக்​கான காரணங்​கள் மற்​றும் சூழ்​நிலை​கள் குறித்து விசா​ரிப்​ப​தற்​காக ஓய்வு பெற்ற நீதிபதி ப.கோகுல்​தாஸ் தலை​மை​யில் விசா​ரணை ஆணை​யம் அமைக்​கப்​பட்​டது. இந்த ஆணை​யம் விசா​ரணை நடத்​தி, தனது இறுதி அறிக்​கையை தாக்​கல் செய்​தது. அந்த விசா​ரணை ஆணை​யத்​தின் அறிக்கை சட்​டசபை​யில் சமர்ப்​பிக்​கப்​பட்​டது.