
பெங்களூரு: செப். 9-
பெங்களூரு புறநகர் பனவதி கிராமத்தை சேர்ந்த விவசாயி கோபாலகிருஷ்ணனின் செம்மறி ஆடு, ஒரே நேரத்தில் நான்கு குட்டிகளை ஈன்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
பெங்களூரு புறநகர் பனவதி கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், விவசாயத்துடன் ஆடுகளையும் வளர்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான ஒரு செம்மறி ஆடு சமீபத்தில் சினையாக இருந்தது.
நேற்று இந்த ஆடு, எதிர்பாராத விதமாக நான்கு குட்டிகளை ஈன்றது. அதில் இரண்டு ஆண் குட்டிகளும், இரண்டு பெண் குட்டிகளும் அடங்கும்.
சாதாரணமாக, ஆடுகள் ஒரு குட்டி அல்லது அதிகபட்சமாக இரண்டு குட்டிகளை மட்டும் ஈன்றெடுக்கும். ஆனால் கோபாலகிருஷ்ணனின் ஆடு நான்கு குட்டிகளை ஈன்றது, இது மிக அரிதானதாகும். இதனால், கோபாலகிருஷ்ணன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இந்த அதிசயமான நிகழ்வு பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இச்சம்பவம் கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பெருமை சேர்த்துள்ளது.













