Home மாவட்டங்கள் பெங்களூர் விஎஸ் பாபுவுக்கு மூச்சுத் திணறல்

விஎஸ் பாபுவுக்கு மூச்சுத் திணறல்

சென்னை: செப்.10-
கொளத்தூர் தொகுதி தவெக வேட்பாளர் விஎஸ் பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான விஎஸ் பாபுவுக்கு 75 வயது. இன்று வீட்டில் இருந்தபோது அதிகாலையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் உடனடியாக சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எம்ஜிஎம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. வயது மூப்பு காரணமாக அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், நேற்று இரவு வீட்டில் இருந்தபோது விஎஸ் பாபுவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாகவும், அப்போது மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தெரிவித்ததாகவும் கூறினர். அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.