
மும்பை: செப். 12 –
இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் தற்போது நடைமுறையில் உள்ள பாஸ்டேக் முறையின்படி வாகனங்கள் வரிசையில் நின்று, தடுப்புகள் திறக்கப்பட்ட பிறகே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், எரிபொருளும் நேரமும் விரயமாகின்றன. இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், வாகனங்கள் எங்கும் நிற்காமல், தங்களின் வழக்கமான வேகத்திலேயே கடந்து செல்லும் தடையற்ற சுங்கக் கட்டண முறையை நடைமுறைக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்நிலையில், மும்பையில் நேற்று நடைபெற்ற குளோபல் ஃபின்டெக் விழாவில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது: ஓராண்டில், பலவழி தடையற்ற போக்குவரத்து மாதிரியின் கீழ், நமது அனைத்து சுங்கச்சாவடிகளிலும் தடையற்ற சுங்கக் கட்டண முறையை செயல்படுத்த விரும்புகிறோம். இதற்கான பணிகளை டிசம்பர் 2026-க்குள் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். அதன்படி, இந்த ஆண்டின் இறுதிக்குள் 60 முதல் 70 சதவீதப் பணிகள் நிறைவடையும் என்று நம்புகிறேன். 2027 மார்ச் மாதத்திற்குள், நாடு முழுவதும் தடையற்ற சுங்கச்சாவடி அமைப்பு செயல்படுத்தப்படும்















