Home செய்திகள் தேசிய செய்திகள் பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும் அப்பாஸ் அராக்சி நம்பிக்கை

பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும் அப்பாஸ் அராக்சி நம்பிக்கை

புதுடில்லி: செப். 12 –
வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளிடையே உறவை மேலும் வலுப்படுத்த இந்தியா தொடர்ந்து முயற்சி செய்து வரும் நிலையில், பிரிக்ஸ் கூட்டமைப்பை மிகச் சிறப்பாக வழிநடத்தும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.தலைநகர் டில்லியில் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. செப்.12 மற்றும் செப்.13 தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டில் உலக நாடுகளின் முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதையொட்டி தலைநகர் டில்லி விழாக்கோலம் பூண்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்பதற்காக டில்லி வந்துள்ள ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பிரிக்ஸ் அமைப்புக்குத் தலைமை தாங்கும் இந்தியாவின் நிலைப்பாட்டையும் செயல்பாட்டையும் பாராட்டியுள்ளார்.டில்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தற்போது பிரிக்ஸ் அமைப்பிற்குத் தலைமை தாங்கும் இந்தியாவை, ஈரான் ஒரு சிறந்த வளர்ந்து வரும் நாடாகக் கருதுகிறது. இந்தியா, பிரிக்ஸ் குழுவையும் அதன் உறுப்பு நாடுகளையும் மிகச் சிறப்பாக வழிநடத்தும் திறன் கொண்டது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.இவ்வாறு அப்பாஸ் அராக்சி கூறினார்.பிரிக்ஸ் அமைப்பு தற்போது மிக முக்கியமான அமைப்பாகப் பங்காற்றி வருகிறது. உலக அளவில் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளிடையே உறவை வலுப்படுத்துவதிலும், அவற்றுக்கிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும் இந்த அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பிற்குத் தற்போது இந்தியா தலைமை தாங்குவதை ஈரான் வரவேற்கிறது.பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் இடையே வர்த்தகம் நடைபெற வேண்டும் என்பதில் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் உறுதியாக உள்ளனர்