
லண்டன்: செப். 13-
தன்னைப் பார்க்க வந்த ரசிகர்களிடம் “அப்பாவைக் காணோம், ஃபினிஷ்டு” என்ற சைகையை முதல்வர் விஜய் காட்டிய சம்பவம் லண்டனில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஆணவத்தின் உச்சம் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.அரசுமுறைப் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள முதல்வர் விஜய், தமிழகத்துக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதுடன், சர்வதேச விளையாட்டு உள்கட்டமைப்புகளையும் நேரில் பார்வையிட்டார். இங்கிலாந்தில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில், இந்த ஆண்டுக்கான மிச்செலின் லீ மான்ஸ் கப் கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. அதன் 5ஆவது சுற்று நேற்று நடைபெற்றது. இதில் ஆசியப் பிரதிநிதியாகவும் சிறப்பு அழைப்பாளராகவும் பங்கேற்ற விஜய், பச்சைக் கொடியை அசைத்து பந்தயத்தைத் தொடங்கி வைத்தார்.
திரைத்துறையில் 34 ஆண்டுகளுக்கும் மேலாக இரு துருவங்களாகக் கருதப்பட்ட விஜய்யும் அஜித்தும் சர்வதேச விளையாட்டுக் களத்தில் இணைந்தது இரு தரப்பு ரசிகர்களிடமும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. இந்த கார் பந்தயத்தில் 44 பந்தயக் கார்கள் பங்கேற்றன. அஜித்தைப் பார்க்க மைதானத்துக்கு வந்த விஜய், அவரைக் கண்டதும் ஓடிச் சென்று கட்டியணைத்து முத்தமிட்டார்.அஜித் குமார் பங்கேற்கும் LMP3 Pro/Am பிரிவில், Ajith RedAnt by Virage அணியின் சார்பில் 16ஆம் எண் கொண்ட Ligier பந்தயக் காரை அவர் இயக்குகிறார். அவருடன் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பந்தய வீரர் ரோமைன் வோஸ்னியாக் பங்கேற்றார். அஜித்தின் ரேஸ் காரில் அமர்ந்து விஜய் போஸ் கொடுத்து, அவருக்கு கைகொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார். மேலும், ரேஸ் காரை இயக்குவது குறித்தும் அஜித் விஜய்க்கு விளக்கினார்.சிறிது நேரத்துக்குப் பிறகு விஜய் கார் பந்தய உடையும் ஹெல்மெட்டும் அணிந்து வந்தார். இதைக் கண்ட ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். பின்னர் இருவரும் தேசியக் கொடியை பறக்கவிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். போட்டியில் அஜித்தின் கார் மாறிமாறி ஓட்டும் பிரிவில் 3ஆவது இடத்தைப் பிடித்தது.
விஜய் தங்கியிருந்த இடத்துக்கு அவரைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். பால்கனியில் நின்ற விஜய், அவர்களைப் பார்த்து “அப்பாவைக் காணோம், ஃபினிஷ்டு” என்ற சைகையையும் இதய வடிவச் சின்னத்தையும் காட்டினார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.














