
புதுடெல்லி, செப். 22-
ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு வழங்கும் லிண்ட்சே ஓ. கிரஹாம் தடைகள் மசோதாவில் அவர் கையெழுத்திட்டுள்ளார். இதனால், தனது கச்சா எண்ணெய் இறக்குமதியில் பாதிக்கும் மேலானதை ரஷ்யாவிலிருந்து பெறும் இந்தியா, தனது மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையில் கடுமையான வர்த்தகத் தடைகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கத் தடைகளை இந்தியா எதிர்கொள்வது இதுவே முதல் முறை அல்ல.
1998-ல், அணு ஆயுத சக்தியாகும் இந்தியாவின் முயற்சியைத் தடுக்க, அப்போதைய அதிபர் பில் கிளிண்டன் நிர்வாகம் இந்தியாவுக்கு எதிராக கடுமையான தடைகளை விதித்தது. கிட்டத்தட்ட அனைத்து வெளிநாட்டு உதவிகள், நிதியுதவிகள், ராணுவ ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றங்களும் தடை செய்யப்பட்டன. மே 11, 1998-ல் ராஜஸ்தானின் போக்ரானில், இந்திய ராணுவத்தின் துப்பாக்கிச் சூடு பயிற்சி தளத்தில் ‘ஆபரேஷன் சக்தி’யின் கீழ் மூன்று நிலத்தடி அணு வெடிப்புகள் நடத்தப்பட்டன.















