Home மாவட்டங்கள் சென்னை தமிழகத்தில் பரவலாக கனமழை

தமிழகத்தில் பரவலாக கனமழை

சென்னை: அக். 23-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கிய நிலையில், கடந்த சில நாள்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் காலை 9 மணி வரை பதிவான மழைப்பொழிவு விவரம் வருமாறு:
சாத்தூரில் 143 மி.மீ., குப்பநத்தத்தில் 115.2 மி.மீ., விருத்தாசலத்தில் 112 மி.மீ., கள்ளிக்குடியில் 108.5 மி.மீ., குடவாசலில் 105.6 மி.மீ., கொடைக்கானலில் 99.84 மி.மீ., வாடிப்பட்டியில் 99.2 மி.மீ., மதுரை வடக்கில் 98.9 மி.மீ., நத்தத்தில் 97.5 மி.மீ., விருதுநகரில் 95 மி.மீ., எழுமலையில் 90.8 மி.மீ., புதுவேட்டக்குடியில் 87 மி.மீ., பெரியாறில் 86.2 மி.மீ., திருப்புவனத்தில் 80.2 மி.மீ., நாகையில் 80.1 மி.மீ., திருமூர்த்தி அணையில் 80 மி.மீ., சோலையாறில் 77 மி.மீ., தேக்கடியில் 75.4 மி.மீ., குண்டேரிப்பள்ளத்தில் 74 மி.மீ., வலங்கைமானில் 72 மி.மீ. மழை பதிவானது.
கவுந்தப்பாடியில் 63.4 மி.மீ., கொடிவேரியில் 59.4 மி.மீ., தனியாமங்கலத்தில் 57 மி.மீ., புலிப்பட்டியில் 54.4 மி.மீ., மாக்கினாம்பட்டியில் 54 மி.மீ., நன்னிலத்தில் 48.6 மி.மீ., பாலமோரில் 48.2 மி.மீ., அரியலூரில் 47.6 மி.மீ., மோகனூரில் 46 மி.மீ., மணலியில் 45.8 மி.மீ., தென்பரநாடு மற்றும் தழுதாழையில் தலா 45 மி.மீ. மழை பெய்தது.
பரமத்தி வேலூர், வாரப்பட்டியில் தலா 40 மி.மீ., பாபநாசத்தில் 39.3 மி.மீ., மைலாடி மற்றும் குருந்தன்கோட்டில் தலா 37.4 மி.மீ., திருமானூரில் 36.8 மி.மீ., மஞ்சளாறில் 35.4 மி.மீ., கடலாடியில் 35.2 மி.மீ., பெரம்பலூர் மற்றும் பெருந்துறையில் தலா 35 மி.மீ., வேப்பந்தட்டையில் 34 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.