Home மாவட்டங்கள் பெங்களூர் வெறிச்சோடிய பட்டாசு கடைகள்

வெறிச்சோடிய பட்டாசு கடைகள்

சிவகாசி: அக். 26-
ஆன்​லைன் விற்​பனை அதி​கரிப்​பால் சிவகாசி​யில் உள்ள கடைகளில் பட்​டாசு விற்​பனை குறைந்​து​விட்​ட​தாக விற்​பனையாளர்​கள் கவலை தெரி​விக்​கின்​றனர்.
சிவகாசி​யில் 1,100-க்​கும் மேற்​பட்ட பட்​டாசு ஆலைகளும், 3,500-க்​கும் அதி​க​மான பட்​டாசு விற்​பனை கடைகளும் உள்​ளன. இங்கு உற்​பத்தி செய்​யப்​படும் பட்​டாசுகள் நாடு முழு​வதும் விற்​பனை செய்​யப்​படு​கின்​றன. தமிழகத்​தில் விருதுநகர் மாவட்​டத்​தில் மட்​டுமே நிரந்​தர பட்​டாசு கடைகளுக்​கான உரிமம் வழங்​கப்​படு​கிறது.
தீபாவளியை முன்​னிட்டு அதிக தள்​ளு​படி, புது ரகப் பட்​டாசுகளை நேரடி​யாக வெடித்து பார்த்து வாங்​கலாம் என்​ப​தால் தமிழகம் மட்​டுமின்றி கேரளம், ஆந்​திர பிரதேசம், கர்​நாடகா உள்​ளிட்ட மாநிலங்​களில் இருந்​தும் பட்​டாசு வாங்​கு​வதற்​காக ஏராளமானோர் சிவகாசிக்கு வரு​வது வழக்​கம்.
சிவகாசி பட்​டாசு கடைகளில் ஆண்​டுதோறும் ஆடிப்​பெருக்கு தினத்​தில் சிறப்பு பூஜையுடன் பட்​டாசு விற்​பனை தொடங்​கும். அன்​றைய தினத்​தி​லிருந்து பெரு நிறு​வனங்​கள் தொழிலா​ளர்​களுக்கு வழங்​கவும், தொழில்​துறை​யினர் வாடிக்​கை​யாளர்​களுக்கு வழங்​கவும் கிஃப்ட் பாக்ஸ் ரக பட்​டாசுகளை ஆர்​டர் கொடுக்க தொடங்​கு​வர். இதைத்​தொடர்ந்து ஆடிப்​பெருக்கு முதல் தீபாவளி வரை சிவகாசி​யில் உள்ள பட்​டாசு கடைகளில் விற்​பனை மும்​முர​மாக நடை​பெறும். ஆயுத பூஜைக்கு பின்பு சில்​லறை விற்​பனையும் களைகட்​டும்.
ஆனால், கடந்த 2 ஆண்​டுகளாக ஆன்​லைனில் பட்​டாசுகளை வாங்க மக்​கள் அதிக ஆர்​வம் காட்டி வரு​கின்​றனர். அதேபோல், தற்​போதும் ஆன்​லைன் விற்​பனை களைகட்​டியது. மேலும், இந்த ஆண்டு வடகிழக்கு பரு​வ​மழை தொடங்​கியதில் இருந்து தொடர்​மழை பெய்து வரு​கிறது.