Home செய்திகள் தேசிய செய்திகள் 12 ஆண்டுகளாக தொடரும் ‘மனதின் குரல்’

12 ஆண்டுகளாக தொடரும் ‘மனதின் குரல்’

புதுடெல்லி, அக். 26-
பிரதமர் நரேந்திர மோடி நேற்று ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் 139-வது பகுதியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
“12 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், மங்களகரமான விஜயதசமி நாளில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியைத் தொடங்கினோம். அன்றிலிருந்து இந்தப் பயணம் எந்தத் தடையும் இன்றி தொடர்ந்து வருகிறது.
இந்தப் பயணத்தில் மக்கள் எனது சக பயணிகளாகவும், வழிகாட்டிகளாகவும் இருந்து வருகின்றனர். சாமானிய மக்களின் கடின உழைப்பு, வீரம், உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு மற்றும் சேவை உணர்வை பாராட்டுவதற்கான ஆசீர்வதிக்கப்பட்ட வாய்ப்பாக இந்த நிகழ்ச்சியை நான் கருதுகிறேன்.
என்னைப் பொறுத்தவரை, ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் 12 ஆண்டு காலப் பயணம், ஒரு புனித யாத்திரைக்கு சற்றும் குறைந்தது அல்ல. இந்த 12 ஆண்டுகளில், சமூகத்தால் அதிகம் கவனிக்கப்படாத பலர், தங்களது அசாதாரணப் பணிகளுக்காக பாராட்டைப் பெற்றுள்ளனர்.
‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் வாயிலாக, நாட்டின் மக்கள் சக்தியை நான் வழிபடுகிறேன். நாட்டின் ஒவ்வொரு குடும்பத்துடனும் தொடர்பு கொள்ள இந்த நிகழ்ச்சி எனக்கு வாய்ப்பளிக்கிறது. ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியைக் கேட்கும்போது, எங்கள் குடும்பத்தில் ஒருவராக எங்களுடன் அமர்ந்து உரையாடுவது போல் உணர்கிறோம் என்று மக்கள் எனக்குக் கடிதங்களில் தெரிவித்துள்ளனர். இந்த நெருக்கமும் பாசமும்தான் எனது விலைமதிப்பற்ற சொத்துகள்” என்று பிரதமர் மோடி கூறினார்.