
சார்புருக்கென், அக். 31-
ஜெர்மனியில் ஹைலோ ஓபன் சர்வதேச பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிச் சுற்றில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற 8-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து, 46-ம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் அமாலி ஷூல்ஸுடன் மோதினார். இதில் சிந்து 21-12, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.
















