Home மாவட்டங்கள் சென்னை தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,480 சரிவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,480 சரிவு

சென்னை, அக். 31-
சர்வதேச நிலவரங்களின் தாக்கத்தால் தமிழகத்தில் கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. திங்கள்கிழமை (அக். 26) ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.13,085-க்கும், ஒரு சவரன் ரூ.1,04,680-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.220-ஆகவும், ஒரு கிலோ ரூ.2,20,000-ஆகவும் இருந்தது.செவ்வாய்க்கிழமை (அக். 27) தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.13,135-ஆகவும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,05,080-ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றம் ஏற்படவில்லை. புதன்கிழமை (அக். 28) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.13,195-ஆகவும், சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.1,05,560-ஆகவும் விற்பனை ஆனது. அன்றைய தினம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.220-ஆகவும், கிலோ ரூ.2,20,000-ஆகவும் இருந்தது.