Home செய்திகள் தேசிய செய்திகள் இலவச மின் மானியத்தை கைவிட சாம்ராட் வேண்டுகோள்

இலவச மின் மானியத்தை கைவிட சாம்ராட் வேண்டுகோள்

பாட்னா, நவ. 3-
பிஹார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மாநில முதல்-அமைச்சர் சாம்ராட் சவுத்ரி, வசதிபடைத்தோரும் வருமான வரி செலுத்துவோரும் இலவச மின்சாரத்துக்கான மானியத்தைத் தாமாக முன்வந்து விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். “இலவச மின்சாரத்துக்காக மாநில அரசு பெரும் தொகையை மானியமாக வழங்கி வருகிறது. வசதிபடைத்தோரும் வருமான வரி செலுத்துவோரும் இலவச மின்சாரத்துக்கான மானியத்தைத் தாமாக முன்வந்து விட்டுக்கொடுக்க வேண்டும். அவர்கள் மின் கட்டணத்தைச் செலுத்தினால் அரசின் நிதிச்சுமை குறையும். இதன் மூலம் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த முடியும்” என்று சாம்ராட் சவுத்ரி தெரிவித்தார்.பிஹாரில் 2.22 கோடி வீட்டு உபயோக மின் நுகர்வோர் உள்ளனர். மாநிலத்தில் அனைத்து வீட்டு உபயோக மின் நுகர்வோருக்கும் மாதந்தோறும் 125 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்காக பிஹார் அரசு ஆண்டுதோறும் ரூ.23,000 கோடியை மாநில மின்வாரியத்துக்கு மானியமாக வழங்குகிறது.