
மான்டேரி கவுண்டி:
நவ. 3- அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், மான்டேரி கவுண்டியில் உள்ள கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர்.காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் என்ன, துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.















