Home மாவட்டங்கள் சென்னை தி.மலை பரணி தீபம், மகா தீபம்

தி.மலை பரணி தீபம், மகா தீபம்

திருவண்ணாமலை: நவ.18-
திரு​வண்​ணா​மலை அண்​ணா​மலை​யார் கோயில் கார்த்​திகை தீபத்​திரு​விழா​வில் பரணி தீபம் மற்​றும் மகாதீபம் தரிசனத்​துக்கு நவ.18-ம்தேதி (இன்று) முதல் ‘ஆன்​லைன்’ மூலம் முன்​ப​திவு செய்து கொள்​ளலாம் என கோயில் நிர்​வாகம் சார்​பில் அறி​விக்​கப்​பட்​டுள்​ளது.
இது குறித்து அண்​ணா​மலை​யார் கோயில் நிர்​வாகம் சார்​பில் வௌியிடப்​பட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில், ‘‘திரு​வண்​ணா​மலை அண்​ணா​மலை​யார்
கோயி​லில் கடந்த ஆண்​டுகளில் நடை​பெற்ற கார்த்​திகை தீபத்​திரு​விழா​வின் போது, பரணி தீபம் மற்​றும் மகாதீபம் தரிசனத்​துக்​கான ரூ.500 மற்​றும் ரூ.600 மதிப்​பிலான கட்​டண நுழைவு சீட்​டுகள் 1,600 எண்​ணிக்​கை​யில் இணை​யதளம் மூலம் முன்​ப​திவு செய்​யப்​பட்டு வந்​தது.
அதன்​படி, இந்​தாண்டு நடை​பெறும் தீபத்​திரு​விழா​வில் பக்​தர்​களின் நலன்​கருதி, இந்து சமய அறநிலைய துறை அமைச்​சர் ரமேஷ் அறி​வுறுத்​தலின்​படி, பரணிதீபம் மற்​றும் மகாதீபம் தரிசனத்​துக்​கான நுழைவு சீட்​டுகள் முற்​றி​லும் இல​வச​மாக 3,000 எண்​ணிக்​கை​யில் ‘ஆன்​லைன்’ மூலம் முன்​ப​திவு செய்​யும் வகை​யில் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.
அதன்​படி, நவ.24-ம் தேதி அன்று காலை நடை​பெறவுள்ள பரணிதீபத்​துக்கு திரு​வண்​ணா​மலை மாவட்​டத்​தைச் சேர்ந்த உள்​ளூர் பக்​தர்​களுக்கு 500 நுழைவு சீட்​டுகள்.
திரு​வண்​ணா​மலை மாவட்​டம் தவிர்த்த பிற மாவட்​டங்​களைச் சேர்ந்த பக்​தர்​களுக்கு 500 நுழைவு சீட்​டுகளும், அன்​றைய தினம் மாலை மகாதீபம் தரிசனத்​துக்கு திரு​வண்​ணா​மலை மாவட்​டத்​தைச் சேர்ந்த உள்​ளூர் பக்​தர்​களுக்கு 1,000 நுழைவு சீட்​டுகள், பிற மாவட்​டங்​களைச்
சேர்ந்த பக்​தர்​களுக்கு 1,000 நுழைவு சீட்​டுகள் வழங்​கப்​பட​உள்​ளன.
இத்​தகைய நுழைவு சீட்​டுகளை பெறவிரும்​பும் பக்​தர்​கள், ஆதார் எண்ணை பயன்​படுத்தி, அண்​ணா​மலை​யார் கோயி​லின் அதி​காரப்​பூர்வ இணை​ய தளமான http://annamalaiyar.hrce.tn.gov.in என்ற முகவரி​யில் நவ.18-ம் தேதி (இன்று) காலை 11.00 மணி முதல் நவ.20-ம் தேதி அன்று மாலை 3 மணிவரை முற்​றி​லும் இல​வச​மாக ‘ஆன்​லைன்’ மூலம்​முன்​ப​திவு செய்து கொள்​ளலாம்.