
சென்னை: நவ. 20-
முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தி வரும் நிலையில், இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்கள் ஒன்றிய அரசின் அமைப்புகளால் தமிழ்நாட்டில் பிடிக்கப்படும் நிலையில், அவற்றில் இருந்து மக்களையும் ஊடகங்களையும் திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர் மூர்த்தியை குறிவைத்து ரெய்டு நடத்தப்படுகிறது. கையாலாகாத தவெக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடும், தவெகவினரின் குற்றச் செயல்களும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஒழுங்கீனமும் சந்தி சிரிக்கும் ஒவ்வொரு முறையும் திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவது வாடிக்கையாகிவிட்டது.
ஆறு மாத ஆட்சியில் சொல்லிக் கொள்ள எந்த சாதனையும் இன்றி, மக்களின் அவநம்பிக்கையை மட்டுமே சம்பாதித்துள்ள முதல்வர் விஜய் இனியும் ‘திமுக, திமுக’ என உச்சரித்து ஏமாற்றுவதைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.













