Home மாவட்டங்கள் சென்னை போதைப் பொருள் பறிமுதல்: ஸ்டாலின் கேள்வி

போதைப் பொருள் பறிமுதல்: ஸ்டாலின் கேள்வி

சென்னை, நவ. 20-
“தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் வரம்பு மீறிய குற்றங்கள் நடக்கும் இடமாக தமிழகம் மாறிவிட்டது” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தவெக ஆட்சியில் வரம்பு மீறிய குற்றங்கள் நடக்கும் இடமாக (Vice City) தமிழ்நாடு மாறிவிட்டது” என்று தெரிவித்துள்ளார். சென்னையில் ரூ.700 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை ஒன்றிய அரசின் வருவாய்ப் புலனாய்வுத் துறை (டிஆர்ஐ) பறிமுதல் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் நாகையில் ரூ.270 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களுடன், தவெக நிர்வாகியான ‘மெத்’ பூபாலனின் கடத்தல் சாம்ராஜ்யத்தைப் பிடித்த அதே டிஆர்ஐ அமைப்புதான் இந்தப் பறிமுதலையும் செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். “தமிழகத்தில் மாதாமாதம் இவ்வளவு பெரிய அளவில் போதைப்பொருட்கள் பிடிபடுகின்றன. தமிழகத்துக்குள் நடைபெறும் இத்தகைய பெருமளவிலான போதைப்பொருள் நடமாட்டத்தை மாநிலக் காவல் துறையால் ஏன் பிடிக்க முடியவில்லை? பிடிக்க முடியவில்லையா அல்லது கண்டும் காணாமல் இருக்கிறார்களா?” என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக இருந்த தமிழகம், தற்போது மெத் மற்றும் ஹெராயின் கடத்தல்காரர்களின் விருப்பமான இடமாக மாறிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். தொடரும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, தவெகவினரின் பாலியல் அத்துமீறல்கள், கொள்ளைச் சம்பவங்கள், லாக்கப் மரணங்கள் ஆகியவற்றால் தமிழகம் ‘Vice City’ ஆகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.