
சென்னை, நவ. 21-
தமிழ்நாட்டில் வரும் 23-ம் தேதி முதல் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.சென்னையில் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்படி, சென்னையில் தொடர்ந்து 2 நாட்கள் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி-டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, காவிரி-டெல்டா மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகை, திருவாரூர், தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் 23-ம் தேதி முதல் பருவமழை பரவலாக பெய்யக்கூடும் என்பதால், மேற்கண்ட பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.













