Home மாவட்டங்கள் சென்னை மீனவர்களின் வாழ்விடத்தை அழிக்கத் துடிக்கிறது தவெக அரசு: ஸ்டாலின்

மீனவர்களின் வாழ்விடத்தை அழிக்கத் துடிக்கிறது தவெக அரசு: ஸ்டாலின்

சென்னை, நவ. 21-
உலகம் முழுவதும் இன்று மீனவர் நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,
தமிழக மீனவர்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜோதிடரின் பேச்சைக் கேட்டு, மீனவர்களின் பாரம்பரிய வாழ்விடத்தை அழிக்க தவெக அரசு துடிப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: “மீனவச் சொந்தங்கள் அனைவருக்கும் கடலளவு அன்போடு உலக மீனவர் நாள் வாழ்த்துகள்.
தமிழர் வரலாற்றிலும் பண்பாட்டிலும் நெய்தல் நிலத்தின் நாயகர்களான மீனவ மக்களுக்கு தனிச்சிறப்பான இடம் உண்டு. அத்தகைய மீனவ மக்களுக்காக, நமது திராவிட மாடல் ஆட்சியில் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு, புதிய மீன்பிடித் துறைமுகங்கள், தூண்டில் வளைவுகள், எரிபொருள் மானியம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால், தற்போதைய தவெக அரசோ, ஜோதிடரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு பட்டினப்பாக்கத்தில்தான் தலைமைச் செயலகம் கட்டுவோம் எனக் கூறி, மீனவர்களின் பாரம்பரிய வாழ்விடத்தை அழிக்கத் துடிக்கிறது. திரையில் மீனவராக நடித்து ஏமாற்றிய முதலமைச்சருக்கு, மீனவர்களின் உண்மையான போராட்டக் குணம் பற்றித் தெரியவில்லை. மீனவர்களின் பாதுகாப்பு, பாரம்பரிய மீன்பிடி உரிமை, மீனவக் குடும்பங்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்காக தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும். அவர்களின் போராட்டத்தில் உடன் நிற்கும். அலைகளோடு போராடி, தமது உயிரைப் பணயம் வைத்து மக்களுக்கு உணவளிக்கும் மீனவ மக்களின் துணிவையும் உழைப்பையும் போற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.