Home மாவட்டங்கள் சென்னை மீனவர் நலன்களைப் பாதுகாப்போம்: முதல்வர் விஜய்

மீனவர் நலன்களைப் பாதுகாப்போம்: முதல்வர் விஜய்

சென்னை, நவ. 21-
உலக மீனவர்கள் தினத்தை முன்னிட்டு,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் மீனவப் பெருமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21-ந்தேதி உலக மீனவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பையும், இயற்கையின் பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு, தங்களின் உயிரையும் உடைமைகளையும் பணயம் வைத்து உழைக்கும் மீனவப் பெருமக்களுக்கு உலக மீனவர் தினத்தில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் கடின உழைப்பின் மூலம் நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கும், பொருளாதார
வளர்ச்சிக்கும் மீனவப் பெருமக்கள் பெரும் பங்காற்றி வருகின்றனர்.
அவர்களின் அர்ப்பணிப்பு மகத்தானது.
மீனவச் சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், அவர்களின் பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்வது நம் அனைவரின் கடமையாகும். மீனவப் பெருமக்களின் நலன்களைப் பேணிப் பாதுகாப்போம்.
இவ்வாறு முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.