
லிமா: நவ. 21-
பெருவில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இரவு 7.09 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.9 ஆகப் பதிவானது.
அன்டிஸ் நகரில் இருந்து 108 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் அதிர்வால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.













