
சென்னை: நவ. 21-
கிண்டலாக பதிவிட்டிருந்த ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷூக்கு அமைச்சர் கீர்த்தனா பதிலடி கொடுத்து உள்ளார்.தமிழகத்தில் தொழில் முதலீட்டுக்கு வழிகாட்டும் ‘கைடன்ஸ்’ நிறுவனத்தில் பணியாற்றிய அலுவலர்கள் சிலர், ஆந்திரா அரசில் பணிக்கு சேர்ந்து விட்டதாகவும், அவர்கள் மூலம் முதலீட்டு ரகசியங்கள் கசிந்து விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாகவே, தமிழகத்துக்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள், ஆந்திராவுக்கு செல்வதாகவும், எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகின்றன.
ஆந்திர அமைச்சரும், சந்திரபாபுவின் மகனுமான நாரா லோகேஷ் சமூக வலைதளத்தில், ‘ஆந்திரப் பிரதேசத்தின் மிக ரகசியமான முதலீட்டு உத்தி கசிந்துவிட்டது. அதுதான், முதலீட்டாளர்களுக்கு உடனடியாக பதிலளிப்பது. தாராளமாக இதைப் பின்பற்றுங்கள்’ என பதிவிட்டு இருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: விரைவான பதில்கள் நல்லது தான்; ஆனால் அதைவிட வேகமான செயல்பாடு, இன்னும் சிறப்பு. வெற்றி முதலீடு மற்றும் மாற்றத்துக்கான 2வது மாநாட்டுக்கு தமிழகம் தயாராகி வருகிறது.
முதலீட்டு உறுதிமொழி, மாற்றத்திற்கான மைல்கற்கள், திட்டங்கள், வேலைவாய்ப்புகள் என எங்கள் இலக்குகள் தெளிவானது. முதல்வர் விஜயின் தலைமையின் கீழ், முதலீடுகளை மைல்கல்லாக மாற்றுவதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது.இன்னும் 4 நாட்களில் வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. இவ்வாறு கீர்த்தனா கூறியுள்ளார்.













