Home செய்திகள் தேசிய செய்திகள் மேற்கு வங்க சாலைத் திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி

மேற்கு வங்க சாலைத் திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி

கொல்கத்தா, நவ. 27-
மேற்கு வங்கத்தில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான புதிய சாலைத் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தார். ஏற்கெனவே நடைபெற்று வரும் ரூ.35,000 கோடி மதிப்பிலான சாலைப் பணிகளுக்கு மேலாக இந்தப் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
கொல்கத்தா வட்டச் சாலைக்கு மட்டும் ரூ.14,000 கோடி ஒதுக்கப்பட உள்ளது. கோலாகாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்-வர் சுவேந்து அதிகாரி முன்னிலையில் பேசிய நிதின் கட்கரி, மேற்கு வங்கத்தின் சாலை உள்கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்தார். அண்டை மாநிலங்களுடனான இணைப்பை மேம்படுத்தும் திட்டங்களை விரைவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். மத்திய அமைச்சரின் அறிவிப்புகளை வரவேற்ற முதல்-வர் சுவேந்து அதிகாரி, திட்டங்கள் உரிய நேரத்தில் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய மாநில அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்றார்.
நிலம் கையகப்படுத்தி வழங்குதல், தேவையான அனுமதிகளை விரைவாக வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் மாநில அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.