Home மாவட்டங்கள் சென்னை கடந்த வருடம் இதே நாள் – கரூர் துயரம் குறித்து முதல்வர் விஜய் வேதனை

கடந்த வருடம் இதே நாள் – கரூர் துயரம் குறித்து முதல்வர் விஜய் வேதனை

சென்னை, செப். 27- கடந்த வருடம் இதே நாள் வேதனையான நிகழ்வு நடந்த நாள்; சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம் என சமூக வலைதளத்தில் முதல்வர் விஜய் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவரது அறிக்கை: என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கடந்த வருடம். இதே நாள். அதாவது 2025 செப்டம்பர் 27. என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழக உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்.

சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும். நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம். நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி. இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.