Home மாவட்டங்கள் பெங்களூர் கௌரிபிதனூர் அருகே லேசான நிலநடுக்கம்

கௌரிபிதனூர் அருகே லேசான நிலநடுக்கம்

பெங்களூரு, அக். 24-
சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் கௌரிபிதனூர் தாலுகா அல்லிபுரம் அருகிலுள்ள வீரம்மனஹள்ளி பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 2.9 அலகு தீவிரமாக பதிவாகியுள்ளது.
தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று அதிகாலை 3 மணி 29 நிமிடம் 42 வினாடிக்கு பூமி அதிர்ந்தது. இந்த நிலநடுக்கத்தின் மையம் பூமிக்கு அடியில் சுமார் 5 கிலோமீட்டர் ஆழத்தில், 13.49 ட்ரோக் மற்றும் 77.42 தீர்க்கரேகையில் அமைந்திருந்தது. நிலநடுக்கத்தின் தீவிரம் குறைவாகவே இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏதேனும் சேதம் ஏற்பட்டதா அல்லது அப்பகுதி மக்கள் அதிர்வை உணர்ந்தார்களா என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல் வெளியாகவில்லை.
முன்னதாக, நேற்று காலை தொட்டபள்ளாப்பூர் தாலுகாவிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 9.01 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவானதாக மாநில இயற்கை பேரிடர் மேலாண்மை மையம் (தெரிவித்தது. தொட்டபள்ளாப்பூர் தாலுகா தூபகெரே கிராம பஞ்சாயத்து எல்லைக்கு உட்பட்ட திம்மோஜனஹள்ளி கிராமத்திற்கு வடக்கே 0.5 கி.மீ தொலைவில், பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் இதன் மையம் அமைந்திருந்தது.
நிலநடுக்கத்தின் தீவிரம் குறைவாக இருப்பதால், நிலநடுக்க மையத்தைச் சுற்றியுள்ள 20 முதல் 30 கி.மீ சுற்றளவில் உள்ள சிலருக்கு மட்டுமே லேசான அதிர்வு தெரிந்திருக்கலாம் என்றும், இதனால் பொதுமக்களுக்கோ அல்லது சொத்துக்களுக்கோ பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்றும் அதிகாரி தெரிவித்துள்ளார். இப்பகுதி நிலநடுக்க ஆபத்து குறைந்த மண்டலம்-2பிரிவில் வருவதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.