Home மாவட்டங்கள் பெங்களூர் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வாலிபர் பலி

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வாலிபர் பலி

an Indian or Asian person laying on floor dead during COVID-19 or corona virus outbreak with selective focus or shallow depth of field

மைசூர்: அக். 9-
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி, தானும் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு அவரைக் கட்டியணைத்து தீ வைத்துக்கொண்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மண்டியா மாவட்டம் மளவள்ளி தாலுகா அழகூடு கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவரின் மகன் சந்தன் (வயது 27). விவசாயம் செய்து வந்த இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த மாணவி மைசூரில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வருகிறார்.
கட்டியணைத்து தீ வைப்பு:
கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி காலையில், மாணவி விடுதியிலிருந்து கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தபோது சந்தன் அவருக்கு போன் செய்து நேரில் சந்திக்க வருமாறு கூப்பிட்டுள்ளார். ஆனால், கல்லூரிக்குச் செல்வதால் வர முடியாது என மாணவி மறுத்துள்ளார்.
இதையடுத்து சந்தன் காரில் அந்த இடத்திற்கு வந்து, மாணவியைச் சந்தித்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்துவிட்டு கல்லூரிக்குச் செல்ல முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த சந்தன், திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை மாணவி மீது ஊற்றி, தன் மீதும் ஊற்றிக்கொண்டு அவரை இறுக்கமாகக் கட்டியணைத்துத் தீ வைத்துக்கொண்டார்.
இந்த கோர சம்பவத்தில் 80 சதவீத தீக்காயங்களுடன் பலத்த காயமடைந்த சந்தனை, உடனடியாக மைசூரில் உள்ள கே.ஆர். மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த 8 நாட்களாக உயிருக்குப் போராடி வந்த சந்தன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அதேவேளையில், 20 சதவீத தீக்காயமடைந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலம் பெற்று வருகிறார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விஜயநகர காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.