Home செய்திகள் தேசிய செய்திகள் செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியாவுக்கு 2 பதக்கம்

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியாவுக்கு 2 பதக்கம்

புதுடில்லி, செப். 28-
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 46-வது செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 2 பதக்கங்களை வென்றது.ஓபன் பிரிவில் 11-வது சுற்றில் இந்தியா, ஹங்கேரி அணிகள் மோதின. இதில் இந்திய அணி 405.5 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது. ஜெர்மனி அணி 386.5 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் பெற்றது. உஸ்பெகிஸ்தான் அணி 20 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்றது. பெண்கள் பிரிவின் 11-வது சுற்றில் இந்தியா, ஜார்ஜியா அணிகள் மோதின. இப்போட்டி 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இந்திய அணிக்காக ஹம்பி வெற்றி பெற்றார். வந்திகா அகர்வால், சவிதா ஸ்ரீ ஆகியோர் தங்களது ஆட்டங்களை டிரா செய்தனர். திவ்யா தோல்வியடைந்தார். 11 சுற்றுகளின் முடிவில் இந்திய பெண்கள் அணி 17 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றது. செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா 2 பதக்கங்களை வென்றதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “நமது செஸ் வீரர்களுக்கு வாழ்த்துகள். அவர்களின் ஆர்வமும் மனவுறுதியும் முன்மாதிரியாகத் திகழ்கின்றன. இந்த வெற்றிகள், இன்னும் பல இளைஞர்களை செஸ் விளையாடவும், அதில் சிறந்து விளங்கவும் ஊக்குவிக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.