Home செய்திகள் உலக செய்திகள் ட்ரம்ப் குறி: புலிட்சர் பரிசு வேண்டும்

ட்ரம்ப் குறி: புலிட்சர் பரிசு வேண்டும்

வாஷிங்டன்: அக். 23-
அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காத நிலையில், தனது எழுத்துகளுக்காக புலிட்சர் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு வழங்கப்பட வேண்டும் என்று ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். உலகம் முழுவதும் நடந்த அல்லது நடக்க இருந்த 7 போர்களைத் தான் தடுத்து நிறுத்தியதாகவும், அதற்காக தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் கடந்த ஆண்டு அவர் வெளிப்படையாகக் கூறினார். எனினும், கடந்த ஆண்டு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இது ட்ரம்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.இந்த ஆண்டும், “நான் 8 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்தேன். உலகமே ஒட்டுமொத்தமாக அழிந்து போவதைத் தடுத்து நிறுத்தினேன். எனவே, அமைதிக்கான நோபல் பரிசுக்கு என்னைவிட தகுதியானவர் வேறு யாரும் இல்லை” என்று ட்ரம்ப் தெரிவித்தார். ஆனால், தென் ஆப்பிரிக்க சட்ட நிபுணரும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவருமான நவநீதம் பிள்ளைக்கு 2026-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த ட்ரம்ப், “நவநீதம் பிள்ளையை யாருக்கும் தெரியாது” என்று விமர்சித்தார்.இந்த நிலையில், தென் கரோலினா மாகாணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், ரஷ்யா தொடர்பான விசாரணையை செய்தியாக வெளியிட்ட பத்திரிகையாளர்களுக்கு புலிட்சர் பரிசு வழங்கப்பட்டதாகவும், அவர்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும் கூறினார். அவர்கள் வெளியிட்ட செய்தி அறிக்கைகள் தவறானவை என்றும் அவர் தெரிவித்தார்.“எனது எழுத்துகளுக்காக எனக்கு புலிட்சர் பரிசு கிடைத்திருக்க வேண்டும். எனக்கு நோபல் அமைதிப் பரிசும் கிடைக்கவில்லை; புலிட்சர் பரிசும் வழங்கப்படவில்லை. இருந்தாலும், அது குறித்து எனக்கு கவலை இல்லை” என்றும் ட்ரம்ப் கூறினார்.