
கிறைஸ்ட்சர்ச், அக். 24- இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று பகல் 12.30 மணிக்கு கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது போட்டியில் இரு அணிகளும் இன்று பகல் 12.30 மணிக்கு ஹேக்லி ஓவல் மைதானத்தில் மோதுகின்றன.முதல் போட்டியில் 226 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி 2 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டிருந்தது. சஞ்சு சாம்சன் 67, கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 42, நமன் திர் 42 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். பவர்பிளேவில் சாம்சனுடன் இணைந்து அபிஷேக் சர்மா மிரட்டியிருந்தார்.
இதேபோன்று இறுதிக்கட்ட ஓவர்களில் நமன் திர் அற்புதமாக செயல்பட்டு இருந்தார். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த திறன் வெளிப்படக்கூடும். கடந்த போட்டியில் அதிரடி பேட்ஸ்மேனான இஷான் கிஷன் காயம் அடைந்தார். இதனால் அவர், இன்றைய போட்டியில் களமிறங்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக 15 வய தாகும் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கக்கூடும். முதல் போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 4 வருடங் களுக்கு பிறகு களமிறங்கிய புவனேஷ்வர் குமார் ஏமாற்றம் அளித்தார். அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ், அக்சர் படேல் ஆகியோரும் ரன்களை வாரி வழங்கினர். பந்துவீச்சை பலப்படுத்தும் வகையில் இன்றைய ஆட்டத்தில் மயங்க் யாதவுக்கு பதிலாக வருண் சக்ரவர்த்தி களமிறங்க வாய்ப்பு உள்ளது. நியூஸிலாந்து அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை கடந்த ஆட்டத்தில் ஃபின் ஆலன், கிளென் பிலிப்ஸ், பெவன் ஜேக்கப்ஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். டிம் செய்பர்ட், டேரில் மிட்செல் ஆகியோரும் கணிசமான ரன்களை சேர்த்த னர். இவர்கள் இந்திய அணி யின் பந்துவீச்சு துறைக்கு மீண்டும் ஒருமுறை அழுத்தம் கொடுக்கக்கூடும்.
















