
புதுடெல்லி, செப். 3- வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் வெளிநாட்டு வருமானத்தை இந்தியாவில் டெபாசிட் செய்ய எப்சிஎன்ஆர் (பி) திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி ஜூன் மாதம் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் அமெரிக்க டாலர் போன்ற வெளிநாட்டு நாணயங்களில் பணத்தை டெபாசிட் செய்யலாம்.
இதனை இந்திய ரூபாயாக மாற்ற அவசியமில்லை. இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் அசல் தொகையும் வட்டியும Foreign Currencyயிலேயே வழங்கப்படும். இதன் மூலம் திரட்டப்பட்ட தொகை 100 பில்லியன் டாலரை (ரூ.9.47 லட்சம் கோடி) எட்டியுள்ளது. NRI-களிடமிருந்து பெருமளவில் வந்த டாலர் வரத்து, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பை 729.3 பில்லியன் டாலராக (ரூ.68.88 லட்சம் கோடி) உயர்த்தியுள்ளது.
மத்திய கிழக்கு போர், கச்சா எண்ணெய் விலையிலான மாற்றம், இந்திய ரூபாயின் சரிவு போன்ற காரணங்களால் அந்நியச் செலாவணி கையிருப்பு அழுத்தத்துக்கு உள்ளாகிய நிலையில்,
இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. அதிக பண வரவு ஏற்படுவதால்,
பின்னர் அந்த நிதி வெளியேறுவதற்கான அபாயம் அதிகரிக்கலாம் என்ற கவலை எழுந்தது.
இதனால், செப். 30-ம் தேதி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்த திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி ஆக. 31-ம் தேதியுடன் நிறுத்திவிட்டது. ஆனால், ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட டெபாசிட்களுக்கான ஸ்வாப் வசதியை செப். 11-ம் தேதி வரை வங்கிகள் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.













