Home மாவட்டங்கள் சென்னை அக்.11-ல் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி

அக்.11-ல் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி

சென்னை: அக். 5-
அக்டோபர் 11-ம் தேதி காலை 10.55 மணிக்கு சென்னை வரும் பிரதமர் மோடி, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பூந்தமல்லி செல்கிறார். பின்னர் நண்பகல் 12.25 மணிக்கு சென்னை ஐஐடி வளாகத்திற்குச் சென்று, மூளை அறிவியல் மையத்தைப் பார்வையிடுகிறார். தொடர்ந்து 10 ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிறுவனர்களுடன் கலந்துரையாடுகிறார்.
பிரதமரின் தமிழக வருகை முன்னிட்டு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது இதற்காக டெல்லியில் இருந்து சிறப்பு அதிகாரிகள் குழுவினர் வந்து ஆய்வு செய்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது