Home மாவட்டங்கள் சென்னை அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துக

அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துக

சென்னை, செப். 12- வடசென்னை மக்களின் அத்தியாவசிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், மின்ட் அருகே நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்த மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: போக்குவரத்து நெரிசல், குடியிருப்பு நெருக்கடி, சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவற்றால் வடசென்னை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, வடசென்னை வளர்ச்சிக்கான சிறப்புத் திட்டங்களை உருவாக்குவதுடன், அதற்கான சிறப்பு நிதியையும் மாநில அரசு ஒதுக்க வேண்டும்.தற்போதைய தலைமைச் செயலகம் கடுமையான இடநெருக்கடியிலும், போக்குவரத்து நெரிசலிலும் சிக்கியிருப்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அரசு அலுவலகங்கள் நீண்டகாலப் பயன்பாட்டுக்கான கட்டுமானங்களாக இருக்க வேண்டும். எனவே, இதுபோன்ற விவகாரத்தில் அரசு அவசரகதியில் செயல்படக் கூடாது. புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படவுள்ள பட்டினப்பாக்கத்தில், அதைச் சுற்றியுள்ள மீனவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.