
வாஷிங்டன், அக். 9-
ஈரானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருவதால், நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக எந்த நேரத்திலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ஈரானுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் ஈரான் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் முழு வீச்சில் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை அனைவருக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் தொடர்ந்து சென்றுகொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில், அமெரிக்காவில் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக எந்த நேரத்திலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தமாட்டோம். ஈரானிடம் அணு ஆயுதம் இருக்காது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.














